Archives: ஜூலை 2019

odb

தொடர்புடைய தலைப்புகள்

> odb

ஜீவனைத் தெரிந்துகொள்ளுதல்

சந்துரு, கிறிஸ்துவை நம்பும் குடும்பத்தில் தான் வளர்ந்தான். ஆனால், கல்லூரி மாணவராகக் குடிப்பழக்கம் மற்றும் கேளிக்கை போன்றவற்றால் தனது சிறுபிராய நம்பிக்கையிலிருந்து வழிதவற ஆரம்பித்தான். பின்னர், " தகுதியற்றிருந்த என்னை, தேவன் மீண்டும் தன்னிடம் சேர்த்துக் கொண்டார்" என்றான். காலப்போக்கில், சந்துரு ஒரு கோடைக்காலத்தில்  முக்கிய நகரங்களின் தெருக்களில் அறிமுகமற்றவர்களோடு இயேசுவைப் பகிர்ந்துகொண்டான். தற்போது, அவனுடைய சபையில் வாலிபர் ஊழியத்தைக் குறித்த பயிற்சி படிப்பை முடித்தான். கிறிஸ்துவுக்காக வாழாமல் நேரத்தை வீணடிப்பதைத் தவிர்க்க இளைஞர்களுக்கு உதவுவதே சந்துருவின் குறிக்கோள்.

சந்துருவைப் போலவே, இஸ்ரவேலின் தலைவரான மோசேக்கும் அடுத்த தலைமுறை குறித்த கரிசனை இருந்தது. தான் விரைவில் தலைமையைத் அடுத்தவருக்கு கொடுக்க வேண்டும் என்பதை அறிந்த மோசே, தேவனின் நல்ல ஒழுங்குமுறைகளை ஜனங்களுக்கு வழங்கினார். பின்னர் கீழ்ப்படிதல் அல்லது கீழ்ப்படியாமையின் பலன்களையும் பட்டியலிட்டார். கீழ்ப்படிதலுக்கு,  ஆசீர்வாதம் மற்றும் ஜீவன்; கீழ்ப்படியாமைக்கு, சாபம் மற்றும் மரணம். அவர் அவர்களிடம், "ஆகையால், நீயும் உன் சந்ததியும் பிழைக்கும்படிக்கு, நீ ஜீவனைத் தெரிந்துகொண்டு" என்றார். "அவரே உனக்கு ஜீவனும்" (உபாகமம் 30:19-20) என்றார். தேவனை நேசிக்கவும், "அவர் சத்தத்திற்குச் செவிகொடுத்து, அவரைப் பற்றிக்கொள்வாயாக" (வ. 20) என்றும் அவர்களை மோசே வலியுறுத்தினார். 

பாவத்தைத் தேர்ந்தெடுப்பது பின்விளைவுகளை உண்டாக்கும். ஆனால் நாம் நம் வாழ்க்கையை மீண்டும் தேவனிடம் ஒப்படைக்கும்போது, ​​அவர் நிச்சயமாக இரக்கம் காட்டுவார் (வ. 2-3) மற்றும் நம்மை மீட்டெடுப்பார் (வ. 4). இந்த வாக்குத்தத்தம் இஸ்ரவேல் ஜனங்களின் சரித்திரம் முழுவதும் நிறைவேற்றப்பட்டது, ஆனால் இயேசு சிலுவையில் செய்த இறுதியான கிரியை மூலம் நம்மையும் தேவனோடு ஐக்கியப்படுத்தியது. நமக்கும் இன்று நமக்கு முன் இந்த தெரிவுதெடுப்பு வைக்கப்பட்டுள்ளது, ஜீவனைத் தேர்ந்தெடுக்க நமக்கு சுதந்தரம் கொடுக்கப்பட்டுள்ளது. 

ஜெபத்தில் தரித்திருத்தல்

அடுமணை (ரொட்டி சுடுதல்)  உதவியாளரான உஷா, முந்திரிப்பழ ரொட்டியைத் திருடுவதாக அவரது மேற்பார்வையாளர் குற்றம் சாட்டியபோது, ​​தன்னைத் தற்காத்துக் கொள்ள மிகவும் உதவியற்றவராக உணர்ந்தார். ஆதாரமற்ற தீர்ப்பு  மற்றும் அதற்கான சம்பளப் பிடித்தம் ஆகியவை அந்த  மேற்பார்வையாளரின் பல தவறான செயல்களில் இரண்டு மட்டுமே. "தேவனே, தயவாய் உதவும். அவளின் கீழ் வேலை செய்வது மிகவும் கடினம், ஆனால் எனக்கு இந்த வேலை தேவை", என உஷா ஒவ்வொரு நாளும் ஜெபித்தாள்.

இதேபோல் உதவியற்றவளாக உணர்ந்த ஒரு விதவையைப் பற்றி இயேசு கூறுகிறார், அவள் "எனக்கும் என் எதிராளிக்கும் இருக்கிற காரியத்தில் எனக்கு நியாயஞ்செய்யவேண்டும்" (லூக்கா 18:3) என்றிருந்தாள். தன் வழக்கைத் தீர்க்க அதிகாரம் உள்ள ஒரு நீதிபதியிடம் சென்றாள். அந்த நீதிபதி அநியாயம் செய்பவர் என்று தெரிந்திருந்தும், அவரை அணுகுவதில் விடாப்பிடியாக இருந்தாள்.

நீதிபதியின் இறுதி பதில் (வ.4-5) அன்புடனும் உதவியுடனும் விரைவாகப் பதிலளிக்கும் (வ.7) நம் பரலோகத் தகப்பனிடமிருந்து முற்றிலும் வேறுபட்டது. விடாமுயற்சி, ஒரு அநீதியான நீதிபதி ஒரு விதவையின் வழக்கை விசாரிக்க செய்யக்கூடும் என்றால், நீதியுள்ள நீதிபதியாக இருக்கும் தேவன் நமக்காக எவ்வளவு அதிகமாகச் செய்ய முடியும்? (வ.7-8). "தம்மால் தெரிந்துகொள்ளப் பட்டவர்களின் விஷயத்தில் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து அவர்களுக்கு நியாயஞ்செய்யாமலிருப்பாரோ?" (வ.7) என்று நாம் அவரை நம்பலாம். மேலும், ஜெபிப்பதில் விடாமுயற்சியுடன் இருப்பது நமது நம்பிக்கையை வெளிப்படுத்தும் ஒரு வழியாகும். நம்முடைய சூழ்நிலைக்கு, தேவன் தமது  பரிபூரண ஞானத்தின்படி பதிலளிப்பார் என்ற நம்பிக்கை இருப்பதால் நாம் தொடா்ந்து நிலைத்திருக்கிறோம்.

இறுதியில், உஷாவின் மேற்பார்வையாளர் மற்ற பணியாளர்கள் தனது  நடத்தையைப் பற்றி புகார் செய்ததை அடுத்து ராஜினாமா செய்தார். நாம் தேவனுக்குக் கீழ்ப்படிந்து நடக்கும்போது; ​நம்முடைய ஜெபங்களின் வல்லமையானது, அதனைக் கேட்டு நமக்கு உதவுகிறவரிடமே இருக்கிறது என்பதை அறிந்து, ஜெபிப்பதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக.

அளவிடமுடியா இரக்கம்

இரண்டு நண்பர்கள் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் கடையில் மடிக்கணினி வாங்கச் சென்றபோது, ​​அவர்கள் கூடைப்பந்து ஜாம்பவான் ஷாகில் ஓ'நீலை சந்தித்தனர். ஓ'நீல், சமீபத்தில்தான் தனது சகோதரி மற்றும் தனது முன்னாள் சக வீரரின் இழப்பை அனுபவித்தார் என்பதை அறிந்திருந்த அவர்கள், பரிவுணர்வோடு தங்கள் இரங்கலைத் தெரிவித்தனர். பின்னர் இருவரும் கடைக்குத் திரும்பிய பிறகு, ஷக் அவர்களை அணுகி, அவர்களுக்கான சிறந்த மடிக்கணினியைத் தெரிவு செய்யும்படி சொன்னார். பின்னர் அவர் அதை அவர்களுக்காக வாங்கினார், ஏனெனில் அவர்கள் அவரை ஒரு கடினமான நேரத்தைக் கடக்கும் ஒரு நபராகப் பார்த்ததினால், அவர்களின் இரக்கத்தால் ஈர்க்கப்பட்டார்.

அந்த சந்திப்பிற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, சாலொமோன், "தயையுள்ள மனுஷன் தன் ஆத்துமாவுக்கு நன்மைசெய்துகொள்ளுகிறான்" (நீதிமொழிகள் 11:17) என எழுதினார். பிறரின் தேவைகளைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு உதவவும் ஊக்குவிக்கவும் நம்மால் முடிந்ததைச் செய்யும்போது, ​​நாமும் பலனடைகிறோம். இது வெறும்  மடிக்கணினியோ  அல்லது மற்ற பொருட்கள் பற்றினதோ மட்டுமல்ல, ஆனால் இந்த உலகம் அளவிட முடியாதபடி தேவன் நம்மை ஆசீர்வதிக்கும் வழிமுறைகளைக் கொண்டுள்ளார், "நல்லொழுக்கமுள்ள ஸ்திரீ மானத்தைக் காப்பாள்; பராக்கிரமசாலிகள் ஐசுவரியத்தைக் காப்பார்கள்" (வ.16) என்று சாலொமோன் அதே அத்தியாயத்தில் முன்பு ஒரு வசனத்தை விளக்கியது போல். தேவனிடம் பணத்தைக் காட்டிலும் அதிக மதிப்புள்ள பரிசுகள் உள்ளன, மேலும் அவர் தனது பரிபூரண ஞானத்திலும் வழிமுறைகளில் அவற்றைத் தாராளமாக அளந்து பகிர்கிறார்.

இரக்கமும் பெருந்தன்மையும் தேவனின் சுபாவத்தை ஒரு பகுதியாகும், ஆகவே அவை நம் சொந்த உள்ளங்களிலும் வாழ்க்கையிலும் வெளிப்படுவதைக் காண அவர் விரும்புகிறார். சாலொமோன் இந்த காரியத்தை இரத்தின சுருக்கமாக : "எவன் தண்ணீர் பாய்ச்சுகிறானோ அவனுக்குத் தண்ணீர் பாய்ச்சப்படும்" (வ. 25) என்றார்.